தமிழ் அதே யின் அர்த்தம்

அதே

பெயரடை

 • 1

  குறிப்பிடப்பட்ட அந்த.

  ‘படத்தில் பார்த்த அதே பூங்கா’
  ‘அதே பொருளை வேறொரு நாட்டுக்கு மிக அதிக விலையில் விற்கிறார்’
  ‘மேலேயிருந்து குதித்தவர் அதே வேகத்தில் ஓடத் தொடங்கினார்’
  ‘நான் சொன்ன அதே இடத்தில் அவன் நின்றிருந்தான்’
  ‘நேற்று நாம் பூங்காவில் பார்த்தோமே, அதே நபர்தான் இவர்’