தமிழ் அதோடு யின் அர்த்தம்

அதோடு

இடைச்சொல்

  • 1

    ‘முன்னர் குறிப்பிடப்படுவதோடு கூட’ என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களுக்கு அல்லது தொடர்ந்து வரும் இரண்டு தொடர்களுக்கு இடையே உள்ள தொடர்பைக் காட்டப் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘வெளிநாடுகளில் வெளியிடப்படும் புத்தகங்களின் விலை அதிகம். அதோடு அவற்றை வரவழைப்பதும் கடினம்’
    ‘பூரண குணம் அடைய ஓய்வும் அதோடு வலி நிவாரணிகளும் தேவைப்படும்’
    ‘செய்வதெல்லாம் நல்லதாகவும் அதோடு தகுந்த நேரத்தில் செய்யப்படுவதாகவும் இருக்க வேண்டும்’