தமிழ் அதோ இதோயென்று யின் அர்த்தம்

அதோ இதோயென்று

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு காலம் கடந்துபோனதே தெரியாத வகையில்.

  ‘இப்போதுதான் இந்த ஊருக்கு வந்ததுபோல் இருக்கிறது. அதோ இதோ என்று மூன்று வருடம் ஓடிவிட்டது’
  ‘விடு முறை விட்டதுதான் தெரியும், அதோ இதோ என்று இரண்டு மாதம் முடிந்து நாளை பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கிறார்கள்’

 • 2

  பேச்சு வழக்கு (திட்டவட்டமாகக் காலத்தைக் குறிப்பிடாமல்) இன்று, நாளை என்று.

  ‘கொடுத்த கடனைக் கேட்டால் அதோ இதோ என்று இழுத்தடிக்கிறான்’
  ‘வேலை கேட்டால் அதோ இதோ என்று அலைக்கழித்துக்கொண்டிருக்கிறார்’