தமிழ் அந்த யின் அர்த்தம்

அந்த

பெயரடை

 • 1

  (இடத்தையோ பொருளையோ நபரையோ குறிப்பிடும்போது) தூரத்தில் இருக்கிற/(காலத்தைக் குறிப்பிடும்போது) கடந்த; முன் நிகழ்ந்த.

  ‘அந்தப் பையன் யார்?’
  ‘அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் வீடுகளே கிடையாது’

 • 2

  முன் நடந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்துவது.

  ‘அவன் வீட்டில் இருந்தான். அந்த நேரத்தில் இது நடந்தது’