தமிழ் அந்தரங்கம் யின் அர்த்தம்

அந்தரங்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (நெருங்கிய ஒரு சிலரைத் தவிர ஒருவர் வாழ்வில்) பிறர் அறிய வேண்டாதது.

  ‘ஒருவருடைய அந்தரங்கத்தை அறிய முயல்வது அநாகரிகம்’
  ‘இருவரும் தங்கள் அந்தரங்கங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்’

 • 2

  பிறர் அறியாத விதம்; ரகசியம்.

  ‘அவர்கள் அந்தரங்கமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்’
  ‘அந்தரங்கத்தில் எவ்வளவோ நடக்கிறது’
  ‘அவர்களுக்குள் அந்தரங்கமான விஷயம் என்று எதுவும் கிடையாது’

 • 3

  உள்மனம்.

  ‘இந்தத் திட்டத்தில் எங்கோ ஆபத்து இருக்கிறது என்று என் அந்தரங்கம் சொல்லிற்று’