தமிழ் அநீதி யின் அர்த்தம்

அநீதி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  நியாயத்திற்கும் நீதிக்கும் புறம்பானது; அநியாயம்.

  ‘அநீதியை எதிர்க்கப் பலரும் முன்வருவதில்லை’
  ‘அநீதிக்குத் துணைபோகாதீர்கள்’

தமிழ் அந்தி யின் அர்த்தம்

அந்தி

பெயர்ச்சொல்

 • 1

  பகல் பொழுது முடியும் நேரம்.

  ‘அந்தி மயங்கி இருட்டத் தொடங்கியது’
  ‘அந்தியில் குழந்தையை ஏன் வெளியில் அனுப்பினாய்?’