தமிழ் அந்நியன் யின் அர்த்தம்

அந்நியன்

பெயர்ச்சொல்

 • 1

  (தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும்) அறிமுகம் இல்லாதவன்; வேற்றாள்.

  ‘இது நம் குடும்பப் பிரச்சினை; ஏதோ அந்நியன்போல் பேசுகிறாயே’

 • 2

  (குலம், மதம், நாடு முதலியவற்றால்) வேறுபட்டவன்.

  ‘கோயில் கருவறையினுள் அந்நியர் நுழைய அனுமதி இல்லை’

 • 3

  சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொண்டவன் அல்லது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாதவன்.

  ‘சமூகத்தின் பார்வையில் அவன் ஒரு அந்நியன்’