தமிழ் அநியாயம் யின் அர்த்தம்

அநியாயம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  நியாயத்துக்குப் புறம்பானது.

  ‘மக்களுக்கு இழைக்கப்படும் அநியாயத்தைத் தட்டிக்கேட்க ஓர் அமைப்பு வேண்டும்’
  ‘தன் கணவன் அநியாயமாகக் கைதுசெய்யப்பட்டான் என்று அவள் புலம்பினாள்’
  ‘அநியாய வட்டி’

 • 2

  (எல்லை மீறிய) குறும்பு; அட்டூழியம்.

  ‘குழந்தைகள் பண்ணுகிற அநியாயம் போதாது என்று குரங்குகள் வேறு!’

 • 3

  பேச்சு வழக்கு இயல்பை மீறியது; அளவை மீறியது.

  ‘என் அண்ணன் அநியாயமாய் நாற்பது வயதில் இறந்துபோனான்’
  ‘அவளை இப்படி அநியாயமாய்க் கேலி செய்யாதீர்கள்’
  ‘நீ சரியாக விவரங்களைச் சொல்லாததனால் நான் அநியாயத்துக்குப் பயந்துபோய்விட்டேன்’