தமிழ் அந்தரம் யின் அர்த்தம்

அந்தரம்

பெயர்ச்சொல்

 • 1

  (தரைக்கு மேல் பிடிமானம் இல்லாத) நடு வெளி.

  ‘கனவில் அந்தரத்தில் மிதப்பது போன்ற உணர்வு’

 • 2

  ஆதரவற்ற நிலை.

  ‘கட்சி மாறியவரை இரு கட்சிகளும் அந்தரத்தில் விட்டுவிட்டன’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு சங்கடம்.

  ‘அவருக்கு என்னால் ஏற்பட்ட அவமானத்தை நினைக்க எனக்கு மிகவும் அந்தரமாக இருக்கிறது’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு அவசரத் தேவை.

  ‘அந்தரத்துக்கு ஒருவாய்த் தண்ணீர்கூட கிடைக்கவில்லை’
  ‘அந்தக் குழைக்காட்டுக்குள் அந்தரத்துக்கு சோடா கூட வாங்க முடியாது’