தமிழ் அன்னக்காவடி யின் அர்த்தம்

அன்னக்காவடி

பெயர்ச்சொல்

  • 1

    (அரிசி, அன்னம் முதலியவற்றைப் பிச்சையாக ஏற்க) நீண்ட கழியின் இரு முனைகளிலும் பாத்திரத்தைக் கட்டித் தொங்கவிட்டுத் தோளில் சுமக்கும் படியான அமைப்பு.

  • 2

    மிகவும் ஏழை.

    ‘அவனே அன்னக்காவடி; அவன் உனக்கு என்ன தர முடியும்?’