தமிழ் அன்பளிப்பு யின் அர்த்தம்

அன்பளிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  ஒருவர்மீது கொண்டுள்ள அன்பைத் தெரிவிக்கும் வகையில் அவருக்குக் கொடுக்கப்படும் பொருள் அல்லது பணம்; பரிசு.

  ‘மணமக்களுக்கு அன்பளிப்புகள் வந்து குவிந்தன’
  ‘நாடக நடிகர்களுக்குச் சில சமயம் மேடையிலேயே அன்பளிப்பு கிடைப்பது உண்டு’

 • 2

  (ஒரு பொருளை வாங்குபவருக்கு அதனோடு கூட) விலை இல்லாமல் அளிக்கப்படுவது; இலவசம்.

  ‘மொத்தமாக நான்கு சேலை வாங்குபவருக்கு ஓர் அழகிய பை அன்பளிப்பாகத் தருகிறார்கள்’