தமிழ் அனற்று யின் அர்த்தம்

அனற்று

வினைச்சொல்அனற்ற, அனற்றி

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (வெயில்) வாட்டுதல்; தகித்தல்.

  ‘கத்திரிவெயில் மோசமாக அனற்றுகிறது’
  ‘அனற்றும் வெயிலில் எங்கே போய்விட்டு வருகிறாய்?’

 • 2

  பேச்சு வழக்கு (வலி, ஜுரம் போன்றவற்றின் மிகுதியால்) முனகுதல்.

  ‘குழந்தை ஜுரத்தால் இரவு முழுவதும் அனற்றிக்கொண்டிருந்தது’