தமிழ் அனிச்சை யின் அர்த்தம்

அனிச்சை

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    தன்னை அறியாமல் ஒரு செயலைச் செய்யும் தன்மை.

    ‘வீட்டை நெருங்கியதும் அனிச்சையாகக் கை பையிலிருந்து சாவியை எடுத்தது’
    ‘கண் இமைப்பதும் ஓர் அனிச்சைச் செயல்தான்’