தமிழ் அனுபந்தம் யின் அர்த்தம்

அனுபந்தம்

பெயர்ச்சொல்

  • 1

    அருகிவரும் வழக்கு புத்தகத்தின் கடைசியில் இணைக்கப்படும் துணைத் தகவல்கள்; பின்னிணைப்பு.

    ‘கட்டுரை எழுதுவதற்குத் துணைபுரிந்த நூல்கள் அனுபந்தத்தில் கொடுக்கப்பட்டுள்ளன’

  • 2

    ஒரு நூலில் விடுபட்ட செய்திகள் தொகுக்கப்பட்டு வெளிவரும் தனித் தொகுதி.

    ‘அனுபந்தத்தோடு சேர்த்து பேரகராதி மொத்தம் ஏழு தொகுதிகளைக் கொண்டிருக்கிறது’