தமிழ் அனுப்பு யின் அர்த்தம்

அனுப்பு

வினைச்சொல்அனுப்ப, அனுப்பி

 • 1

  (ஒருவரை) ஓர் இடத்துக்குப் போகச்செய்தல்; (ஒன்றை) ஓர் இடம் சென்றடையச்செய்தல்.

  ‘அம்மாவை ஊருக்கு அனுப்பிவிட்டுத் திரும்பிவருகிறேன்’
  ‘சாமான் வாங்கப் பையனைக் கடைக்கு அனுப்பியிருக்கிறாயா?’
  ‘நீங்கள் அனுப்பிய புத்தகம் கிடைத்தது’

 • 2

  (செய்தி, தகவல் போன்றவற்றை) கிடைக்குமாறு செய்தல்.

  ‘செவ்வாய் கிரகத்தைப் பற்றிய விவரங்களைச் செயற்கைக்கோள் தொடர்ந்து பூமிக்கு அனுப்புகிறது’
  ‘மூளை சில சமிக்ஞைகளை நரம்புகள் மூலம் மற்ற உறுப்புகளுக்கு அனுப்புகிறது’

 • 3

  (ஒருவரை ஒரு பள்ளி, கல்லூரி போன்றவற்றிலிருந்தோ அல்லது ஒரு அமைப்பிலிருந்தோ) நீக்குதல்; வெளியேற்றுதல்.

  ‘பணம் கட்டாத மாணவனைப் பள்ளியிலிருந்து அனுப்பிவிட்டார்கள்’
  ‘போராட்டத்தில் கலந்துகொண்டால் பணியிலிருந்து அனுப்பப்படுவீர்கள் என்று நிர்வாகம் தொழிலாளர்களை எச்சரித்தது’