தமிழ் அனுபவி யின் அர்த்தம்

அனுபவி

வினைச்சொல்அனுபவிக்க, அனுபவித்து

 • 1

  (இன்பம் தருவதை) உணர்ந்து மகிழ்தல்; ரசித்தல்.

  ‘இதமான குளிரையும் வெயிலையும் அனுபவிப்பதே ஓர் அலாதி சுகம்’
  ‘இசையை அனுபவிக்கத் தொடங்கினால் கவலைகள் மறந்துபோகும்’

 • 2

  (துன்பம், கஷ்டம் முதலியவற்றை) பட்டு அல்லது உணர்ந்து அறிதல்.

  ‘ஒவ்வொரு கலைஞனும் ஒரு விதமான பிரசவ வேதனையை அனுபவிக்கிறான்’
  ‘அவர் அனுபவித்த துன்பங்களும் அவமானங்களும் கொஞ்சம் அல்ல’

 • 3

  (ஒன்றின்) பயனைப் பயன்படுத்திக்கொள்ளுதல்.

  ‘சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிலர் சுதந்திரத்தின் பலனை அனுபவிக்காமல் போய்விட்டார்கள்’