அனுமதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அனுமதி1அனுமதி2

அனுமதி1

வினைச்சொல்அனுமதிக்க, அனுமதித்து

 • 1

  (செய்ய/இருக்க/போக) விடுதல்/(ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு) சம்மதித்தல்.

  ‘இவர்களை யார் உள்ளே வர அனுமதித்தது?’
  ‘அவர் தன் பக்கத்தில் யாரையும் உட்கார அனுமதிக்க மாட்டார்’
  ‘அப்பா இருந்திருந்தால் உன் விருப்பப்படி நடக்க அனுமதித்திருப்பார்’

 • 2

  (மருத்துவமனை முதலியவற்றில்) சேர்த்தல்.

  ‘நோயைக் கண்டறிவது கடினமாக இருக்கும்போது நோயாளியை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருக்கும்’
  ‘தீவிரச் சிகிச்சை தேவைப்பட்டால் நோயாளியை மருத்துவமனையில் அனுமதிக்கலாம்’

அனுமதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அனுமதி1அனுமதி2

அனுமதி2

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு அளிக்கும்) சம்மதம்; இசைவு.

  ‘அனுமதி பெற்று உள்ளே வாருங்கள்’
  ‘இந்தத் துப்பாக்கித் தொழிற்சாலையைச் சுற்றிப்பார்க்க முன்அனுமதி பெற வேண்டும்’

 • 2

  அதிகாரபூர்வமாக எழுத்துமூலம் வழங்கப்படும் ஒப்புதல்.

  ‘இந்தியா முழுவதும் செல்ல வாகனங்களுக்குத் தனி அனுமதி வேண்டும்’