தமிழ் அனுமானம் யின் அர்த்தம்

அனுமானம்

பெயர்ச்சொல்

 • 1

  குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளிலிருந்து அல்லது முழுமையாக இல்லாத தகவல்களிலிருந்து உருவாக்கிக்கொள்ளும் உத்தேசமான முடிவு; ஊகம்.

  ‘வீடு கட்டுவதற்கு எவ்வளவு ஆகும் என்ற என் அனுமானம் தப்பாகிவிட்டது’
  ‘அவர் அப்படிப் பேசியிருக்க மாட்டார் என்பது அவளுடைய அனுமானம்’

 • 2

  தருக்கம்
  அறிவைப் பெறும் முறைகளில் ஒன்று.