தமிழ் அனுமானி யின் அர்த்தம்

அனுமானி

வினைச்சொல்அனுமானிக்க, அனுமானித்து

  • 1

    (ஒரு சில அறிகுறிகளிலிருந்து) ஓர் உத்தேசமான முடிவுக்கு வருதல்; உத்தேசமாகத் தீர்மானித்தல்.

    ‘புகைவண்டி நிலையத்தில் இருந்த கூட்டத்தைப் பார்த்து யாரோ முக்கியமானவர் வருகிறார் என்பதை அனுமானிக்க முடிந்தது’

  • 2

    (ஒன்றைச் செய்ததாக, ஒன்றுக்குப் பொறுப்பாக) கருதுதல்.

    ‘பொய்யான ஆவணம் என்று தெரிந்திருந்தும் அதைப் பயன்படுத்திக்கொள்பவர் ஆவணத்தை உருவாக்கியவராக அனுமானிக்கப்படுவார்’