தமிழ் அனைத்து யின் அர்த்தம்

அனைத்து

பெயர்ச்சொல்

 • 1

  (விடுபாடு இல்லாமல்) எல்லாம்.

  ‘அனைத்து இந்தியப் பல்கலைக்கழக ஆசிரியர்கள்’
  ‘அனைத்துக் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு’
  ‘அனைத்துக் கட்சிக் கூட்டம்’
  ‘தொழிற்சாலைக் கழிவுகள் விளைநிலங்கள் அனைத்தையும் பாழாக்கிவிட்டன’
  ‘மாநிலங்கள் அனைத்துக்கும் இந்த வரி பொருந்தும்’
  ‘வாகனங்கள் அனைத்தும் வேறு சாலைகளில் திருப்பிவிடப்பட்டன’
  ‘போட்ட திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்’

 • 2

  பெருகிவரும் வழக்கு தொடர்ந்துவரும் பெயர்ச்சொல் குறிப்பிடும் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நிறைந்திருப்பது.

  ‘அனைத்து மகளிர் காவல் நிலையம்’
  ‘அனைத்து மகளிர் வங்கி’