அன்னம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அன்னம்1அன்னம்2

அன்னம்1

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு உணவு; சோறு.

  ‘வாழை இலையில் தும்பைப் பூப் போன்ற அன்னம் படைத்து நெய் விட்டாள்’

அன்னம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அன்னம்1அன்னம்2

அன்னம்2

பெயர்ச்சொல்

 • 1

  நீண்டு வளைந்த கழுத்தையும் சவ்வினால் இணைந்த விரல்களையும் உடைய (வாத்து போன்று இருக்கும்) வெண்ணிற நீர்ப்பறவை.

  ‘இந்தியாவில் அன்னம் கிடையாது’

 • 2

  (புராணத்தில்) பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் பிரித்து உண்ணும் தன்மை உடைய ஒரு வெண்ணிறப் பறவை.

  ‘இலக்கியத்தில் பெண்களின் நடைக்கு அன்ன நடையை உதாரணமாகக் கூறுவார்கள்’