தமிழ் அன்பு யின் அர்த்தம்

அன்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  ஒருவரின் மனம் நெகிழும்படியாக அவர் மேல் மற்றொருவர் வெளிப்படுத்தும் பாசமும் நேசமும் நட்பும் கலந்த உணர்வு.

  ‘அவர் உன் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்!’
  ‘முதலாளி உன்னிடம் அன்பாக நடந்துகொள்கிறார், இல்லையா?’
  ‘ஆசிரியரின் அன்பான பேச்சு மாணவர்களைக் கவர்ந்தது’

 • 2

  (மனிதர் அல்லாத பிற உயிர்களிடம்) பரிவு.

  ‘எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்’