தமிழ் அப்படி யின் அர்த்தம்

அப்படி

வினையடை

 • 1

  ஏற்கெனவே குறிப்பிட்ட விதத்தில் அல்லது முறையில்; அவ்வாறு.

  ‘அன்று அப்படிப் பாடுபட்டதால்தான் இன்று நன்றாக இருக்கிறார்’
  ‘நான் அவசரமாகப் புறப்பட்டேன். அப்படிப் புறப்பட்டதால் பணம் எடுத்து வர மறந்துவிட்டேன்’

 • 2

  அந்தப் பக்கம்; அங்கு.

  ‘வாருங்கள், அப்படிப் போய் மரத்தடியில் உட்கார்ந்து பேசலாம்’

தமிழ் அப்படி யின் அர்த்தம்

அப்படி

இடைச்சொல்

 • 1

  ஒரு தன்மையின் மிகுதியை உணர்ச்சியுடன் குறிப்பிடப் பயன்படுத்தும் இடைச்சொல்.