தமிழ் அப்படியும் யின் அர்த்தம்

அப்படியும்

இடைச்சொல்

  • 1

    ‘இருந்தபோதிலும்’ என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்தும்போது இரண்டாவது வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘இவ்வளவு பணம் கொடுத்திருக்கிறேன். அப்படியும் திருப்தி இல்லையென்றால் என்ன செய்வது?’
    ‘‘நீங்கள் அனைவரும் ஒப்புக்கொண்டால் மட்டுமே நான் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவேன்’ என்றான். அப்படியும் எல்லோரும் மௌனமாக இருந்தார்கள்’