தமிழ் அப்படியே யின் அர்த்தம்

அப்படியே

வினையடை

 • 1

  (மாற்றாமலும் சேர்க்காமலும்) உள்ளபடியே; (ஒன்று அது) இருக்கிற நிலையில்.

  ‘பாகற்காயை அப்படியே சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள்’
  ‘பூவைத் தாளில் சுற்ற வேண்டாம். அப்படியே கொடு’

 • 2

  அதனுடன்; அதோடுகூட.

  ‘நீ கடைக்குச் சாமான் வாங்கப் போகிறாயா? அப்படியே எனக்கும் ஒரு பேனா வாங்கிவந்துவிடு’