தமிழ் அப்பால் யின் அர்த்தம்

அப்பால்

வினையடை

 • 1

  (இருக்கும் இடத்திலிருந்து) வேறு புறமாக.

  ‘பெண்கள் வருவதைப் பார்த்து அவர் அப்பால் நகர்ந்தார்’
  ‘‘அப்பால் போ, சாத்தானே’ என்றார் இயேசு’

 • 2

  (குறிப்பிட்ட நேரத்திற்கு அல்லது நிகழ்வுக்கு) பின்; பிறகு; அப்புறம்.

  ‘அப்பால் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது’

 • 3

  (நான்காம் வேற்றுமைக்குப் பின்) தூரத்தில்; தள்ளி; தாண்டி.

  ‘ஊரை விட்டு விலகி ஒரு மைலுக்கு அப்பால் தேசிய நெடுஞ்சாலை செல்லுகிறது’
  ‘தூரப்பார்வை உள்ளவர்களுக்குப் பிம்பம் விழித்திரைக்கு அப்பால் விழுகிறது’