தமிழ் அப்பாவித்தனம் யின் அர்த்தம்

அப்பாவித்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    கள்ளங்கபடு இல்லாத, தற்காத்துக்கொள்ளவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் தெரியாத தன்மை; வெகுளித்தனம்.

    ‘‘என்னை ஏன் அடிக்கிறீர்கள்? நான் என்ன தப்பு செய்தேன்?’ என்று அவன் அவர்களிடம் அப்பாவித்தனமாகக் கேட்டான்’
    ‘இந்தப் படத்தில் கதாநாயகியின் அப்பாவித்தனமான நடிப்பு அவருக்கு நிச்சயம் தேசிய விருதை வாங்கித்தரும்’