தமிழ் அப்புறப்படுத்து யின் அர்த்தம்

அப்புறப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

 • 1

  (ஒரு இடத்திலிருந்து) நீக்குதல்; அகற்றுதல்.

  ‘குப்பையை உடனுக்குடன் அப்புறப்படுத்து’
  ‘விபத்து நடந்த இடத்திலிருந்து காயமுற்றோரை அப்புறப்படுத்தினார்கள்’

 • 2

  (அமைதி, ஒழுங்குமுறை போன்றவற்றைக் காக்கவும், ஆபத்திலிருந்து காப்பாற்றவும் ஒருவரை அல்லது ஒன்றை) அகற்றுதல்.

  ‘புயல் அறிவிப்பை ஒட்டிக் கடலோரத்தில் வாழும் மீனவர் குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டன’
  ‘முன் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன’