தமிழ் அப்புறம் யின் அர்த்தம்

அப்புறம்

வினையடை

 • 1

  (ஒன்று கழிந்த) பின்; அதன் பிறகு.

  ‘நான் எட்டு மணிக்குப் புறப்பட்டு வந்துவிட்டேன். அப்புறம் என்ன நடந்தது?’

 • 2

  (எதிர்காலத்தில்) பின்னொரு சமயம்.

  ‘அப்புறம் வா; பேசிக்கொள்வோம்’

 • 3

  (நான்காம் வேற்றுமைக்குப் பின்) அடுத்து; பிறகு.

  ‘சென்னையிலிருந்து போகும்போது சிதம்பரத்துக்கு அப்புறம்தான் சீர்காழி’
  ‘எனக்கு அப்புறம் யார் விளையாட வேண்டும்?’