தமிழ் அபிப்பிராயம் யின் அர்த்தம்

அபிப்பிராயம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவருடைய) சொந்தக் கருத்து.

  ‘அவர் திறமையானவர் என்பது எல்லோருடைய அபிப்பிராயம்’
  ‘தேர்தல் முடிவுகள்பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?’

 • 2

  (ஒரு துறையில்) வல்லுநர் கொண்டிருக்கும் கருத்து.

  ‘வழக்கறிஞரிடம் அபிப்பிராயம் கேட்டு அதன்படி செய்யலாம்’
  ‘இதைப் பற்றி மருத்துவர் என்கிற முறையில் என் அபிப்பிராயம் வேறு; தனிப்பட்ட முறையில் என் அபிப்பிராயம் வேறு’

 • 3

  செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கும் எண்ணம்.

  ‘பையனை மேலே படிக்கவைக்கும் அபிப்பிராயம் எங்களுக்கு இருக்கிறது’