தமிழ் அபூர்வம் யின் அர்த்தம்

அபூர்வம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  எப்போதோ ஒரு முறை நிகழ்வது அல்லது காணப்படுவது; அரிதானது.

  ‘இன்னொரு வாய்ப்பு கிடைப்பது அபூர்வம்’
  ‘இந்த வகையான கூத்து அபூர்வமாகத்தான் நடத்தப்படுகிறது’

 • 2

  முன்னர் அறிந்திராத ஒன்று; புதுமையானது.

  ‘அவர் அபூர்வமான ஒரு வழியில் படத்தை முடிக்க நினைக்கிறார்’
  ‘அபூர்வ ராகம்’

 • 3

  வழக்கத்துக்கு மாறானது.

  ‘அபூர்வமாக அவன் காலை ஐந்து மணிக்கே எழுந்துவிட்டான்’