தமிழ் அம்பலம் யின் அர்த்தம்

அம்பலம்

பெயர்ச்சொல்

 • 1

  கிராமத்தில் பொதுக் காரியங்கள் விவாதிக்கப்படும் அல்லது பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும் ஊர்ப் பொது இடம்.

 • 2

  (ரகசியமாக இருக்க வேண்டியது) வெளியாகிவிட்ட நிலை.

  ‘ரகசியம் அம்பலத்துக்கு வந்தது’
  ‘அவருடைய பலவீனங்களை அம்பலப்படுத்த வேண்டாம்!’
  ‘கேள்வித்தாள் அம்பலமானது குறித்து விசாரணை’