தமிழ் அம்பாரம் யின் அர்த்தம்

அம்பாரம்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (பொருள்களின்) பெரும் குவியல்.

  ‘கல்யாண வீட்டில் நறுக்கிய காய்கறிகளை அம்பாரமாகக் குவித்திருந்தார்கள்’
  ‘தேங்காய்கள் அம்பாரமாய்க் குவிந்துகிடந்தன’
  ‘துவைக்க வேண்டிய துணி ஒரு அம்பாரம் கிடக்கிறது’
  உரு வழக்கு ‘தேவராட்டத்திற்குத் தேவையான உடலும் வளைவும் அசைவும் அவனிடம் அம்பாரமாய்க் கொட்டிக்கிடந்தன’