தமிழ் அம்மணி யின் அர்த்தம்

அம்மணி

பெயர்ச்சொல்

 • 1

  அருகிவரும் வழக்கு பெண்களை மரியாதையுடன் விளிக்கப் பயன்படும் சொல்.

  ‘அம்மணி தங்களுக்கு என்ன வேண்டும்?’
  ‘சற்று நேரம் காத்திருக்க வேண்டும், அம்மணி’

 • 2

  வட்டார வழக்கு (அன்பு, உரிமை, மரியாதை போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில்) (வயது வேறுபாடின்றி) ஒரு பெண்ணைக் குறிக்கப் பயன்படும் சொல்.

  ‘அம்மணி, எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு’
  ‘என்ன அம்மணி இப்படிப் பண்ணிவிட்டாய்?’
  ‘சீக்கிரம் கிளம்பு அம்மணி’
  ‘அம்மணிக்குக் காஞ்சிபுரம் பட்டுப் புடவை ஒன்று வாங்கிவந்தேன்’