பெயர்ச்சொல்
- 1
பெற்றோரில் பெண்; தாய்.
- 2
ஒரு பெண்ணைக் குறிப்பிடப் பயன்படுத்தும் மரியாதைச் சொல்.
‘துணைக்குப் பக்கத்து வீட்டு அம்மா இருக்கிறார்’‘இந்த அம்மா கடைக்கு வந்தாலே தொந்தரவுதான்’‘என்னம்மா இப்படி மரியாதை இல்லாமல் பேசுகிறீர்கள்’ - 3
சில தொழில்களைக் குறிக்கும் பெயர்ச்சொற்களுடன் மரியாதையைத் தெரிவிக்கவும் பெண் என்பதை உணர்த்துவதற்கும் இணைக்கப்படும் சொல்.
‘வக்கீலம்மா’‘டாக்டரம்மா’ - 4
வயதில் மூத்தவர் அல்லது உயர்நிலையில் இருப்பவர் வயதில் இளைய பெண்களை அழைக்கப் பயன்படுத்தும் சொல்.
இடைச்சொல்
- 1
வலியைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் இடைச்சொல்.
‘படியில் தடுக்கி விழுந்தவன் ‘ஐயோ, அம்மா’ என்று கத்தினான்’