அமர -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அமர்1அமர2

அமர்1

வினைச்சொல்

 • 1

  உட்கார்தல்.

  ‘பட்டத்து யானைமீது அமர்ந்து அரசர் ஊர்வலம் வந்தார்’
  ‘அவர்கள் கடற்கரை மணலில் அமர்ந்து பேசத் தொடங்கினார்கள்’
  ‘கிளிகள் பறந்துவந்து தென்னை மட்டையில் அமர்ந்தன’

 • 2

  (வெயில்) தாழ்தல்.

  ‘வெயில் அமர்ந்த பிறகு வா’

 • 3

  (வேலையில்) சேர்தல்; (ஆட்சியை) ஏற்றல்.

  ‘படிப்பு முடிந்தது; வேலையிலும் அமர்ந்தாயிற்று’
  ‘அவன் மளிகைக் கடையில் வேலைக்கு அமர்ந்தான்’
  ‘அவர்கள் ஆட்சியில் அமர்ந்தவுடன் புதிய திட்டங்களை அறிவித்தார்கள்’

அமர -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அமர்1அமர2

அமர2

பெயரடை

 • 1

  என்றும் புகழுடன் நிலைத்து நிற்கக்கூடிய.

  ‘அமர கவி’
  ‘அமர இலக்கியம்’