தமிழ் அமர்க்களப்படு யின் அர்த்தம்

அமர்க்களப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (ஒரு மங்கல நிகழ்ச்சி, விழா போன்றவை நடக்கும் இடத்தில்) இரைச்சலுடன் கூடிய உற்சாகமோ அல்லது (விரும்பத்தகாத ஒன்று நடந்துவிட்ட இடத்தில்) இரைச்சலுடன் கூடிய குழப்பமோ காணப்படுதல்.

    ‘பெரிய பந்தலும் மாவிலைத் தோரணமும் மேளதாளமுமாகக் கல்யாண வீடு அமர்க்களப்பட்டது’
    ‘காவல்துறையினர் வந்து போய்க்கொண்டிருந்ததால் திருடுபோன வீடு அமர்க்களப்பட்டது’