அமர்த்து -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அமர்த்து1அமர்த்து2

அமர்த்து1

வினைச்சொல்அமர்த்த, அமர்த்தி

 • 1

  (ஒன்றை வாடகைக்கு) ஏற்பாடு செய்தல்.

  ‘குதிரை வண்டி ஒன்றை அமர்த்திக்கொண்டு வருவதற்குள் நேரம் ஆகிவிட்டது’
  ‘இந்த வீட்டை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம்’

 • 2

  (ஒரு பணியை முடித்துத்தர அல்லது ஒருவருக்கு உதவியாக இருக்க மற்றொருவரை) நியமித்தல்.

  ‘தனக்காக வாதாட ஒரு பிரபல வழக்கறிஞரை அமர்த்தினார்’
  ‘தாத்தாவுக்கு உதவியாக இருக்க இந்தப் பையன் அமர்த்தப்பட்டிருக்கிறான்’
  ‘அரசு மருத்துவமனையில் நிர்வாக அலுவலர்கள் அமர்த்தப்படுவார்கள்’

 • 3

  உட்காரவைத்தல்.

  ‘குழந்தையை மடியில் அமர்த்திக்கொண்டு சோறு ஊட்டினாள்’

 • 4

  (ஆட்சியில் அல்லது பொறுப்பில்) இருக்கும்படி செய்தல்.

  ‘ஒரு கட்சியை ஆட்சியில் அமர்த்தவும் நீக்கவும் தேர்தல் உதவுகிறது’

அமர்த்து -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அமர்த்து1அமர்த்து2

அமர்த்து2

வினைச்சொல்அமர்த்த, அமர்த்தி

 • 1

  (விளக்கு, அடுப்புத் தீ போன்றவற்றை) அணைத்தல்.

  ‘விளக்கை அமர்த்து’

 • 2

  பேச்சு வழக்கு (ஒன்றின் தீவிரத்தை) தணித்தல்.

  ‘வாழைப்பழம் பசியை அமர்த்துமாம்’
  ‘குழந்தையின் அழுகையை அமர்த்தப் பெரும்பாடு பட்டாள்’