தமிழ் அமுக்கு யின் அர்த்தம்

அமுக்கு

வினைச்சொல்அமுக்க, அமுக்கி

 • 1

  கீழ்நோக்கி, உள்நோக்கி அழுத்துதல்; (கைகளால் பற்றி) பலமாக நெருக்குதல்.

  ‘திமிர முடியாதபடி யாரோ தன்னை அமுக்குவதை உணர்ந்தான்’
  ‘ஓர் அலை அவனை நீருக்குள் அமுக்கியது’
  ‘பெட்டியை அமுக்கிப் பூட்டு’
  ‘அழைப்பு மணியின் பொத்தானை அமுக்கினார்’
  உரு வழக்கு ‘குடும்பச் சுமை அவனை அமுக்குகிறது’
  உரு வழக்கு ‘நீ மேலே வராதபடி அமுக்கப்பார்க்கிறார்கள்’

 • 2

  (உண்மை, செய்தி முதலானவை) வெளிவராதபடி செய்தல்.

  ‘இந்த வழக்கில் உண்மை அமுக்கப்பட்டுவிட்டது’

 • 3

  (ஒன்றை ஒன்றினுள்) திணித்தல்.

  ‘குரங்கு பழத்தை வாய்க்குள் அமுக்கும் வேகத்தைப் பார்!’

 • 4

  (குரலை, சப்தத்தை) அடக்குதல்.

  ‘நாகசுரத்தின் இயல்பான ஒலிபோல் இல்லாமல் சப்தம் அமுக்கப்பட்டது போல் வருகிறது’

 • 5

  பேச்சு வழக்கு அபகரித்தல்; மோசம்செய்தல்.

  ‘அவர் தன் தம்பியின் சொத்தை அமுக்கிவிட்டதாகப் பேசிக்கொள்கிறார்கள்’
  ‘கூட்டத்தில் யாரோ என் கைப்பையை அமுக்கிவிட்டார்கள்’