அமை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அமை1அமை2

அமை1

வினைச்சொல்அமைய, அமைந்து, அமைக்க, அமைத்து

 • 1

  நிறுவப்படுதல்; உருவாக்கப்படுதல்.

  ‘இந்த ஊரில் அமையவிருக்கும் அணுமின் நிலையத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள்’

 • 2

  குறிப்பிட்ட முறையில், வடிவத்தில் அல்லது தன்மையில் இருத்தல்.

  ‘தோடி ராகத்தில் அமைந்த கீர்த்தனை’
  ‘அது அவ்வளவு நல்ல ஏற்பாடாக அமையவில்லை’
  ‘சட்ட விதிகள் இவ்வாறு அமைந்துள்ளன’
  ‘அறைகள் வசதியாக அமைந்திருந்தன’
  ‘முதல் பதிப்பிலிருந்து பெரிதும் வேறுபட்ட முறையில் இரண்டாம் பதிப்பு அமைந்திருக்கிறது’
  ‘அவளுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்தது’
  ‘வட்ட வடிவில் அமைந்த மேஜை’

 • 3

  தேடும் ஒன்று கிடைத்தல்.

  ‘என் பெண்ணுக்கு மாப்பிள்ளை அமையவில்லை’
  ‘எனக்குக் கிடைத்த வேலை எனக்கு ஏற்றதாகவே அமைந்துவிட்டது’
  ‘அவனுக்கு இன்னும் நல்ல வேலை அமையவில்லை’

அமை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அமை1அமை2

அமை2

வினைச்சொல்அமைய, அமைந்து, அமைக்க, அமைத்து

 • 1

  உருவாக்குதல்; ஏற்படுத்துதல்.

  ‘சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டுவருகின்றன’
  ‘இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகளை நன்றாக அமைத்திருக்கிறார்கள்’
  ‘நீங்கள்தான் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும்’
  ‘சட்ட விதிகள் திருத்தி அமைக்கப்பட்டுவருகின்றன’

 • 2

  (ஆட்சி, நிர்வாகக் குழு முதலியவற்றை) தோற்றுவித்தல்; ஏற்படுத்துதல்.

  ‘தொழிலாளர்கள் சங்கம் அமைத்துப் போராடினார்கள்’
  ‘உயர் ஆலோசனைக் குழு அமைக்க முடிவு’

 • 3

  (ஒன்றை மற்றொன்றில்) இணைத்தல்; பொருத்துதல்.

  ‘இந்த இயந்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்புகளின் வரைபடம் இது’