தமிழ் அமைதி யின் அர்த்தம்

அமைதி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  சத்தம் இல்லாத நிலை; நிசப்தம்.

  ‘ஆசிரியர் வந்ததும் வகுப்பில் அமைதி ஏற்பட்டது’

 • 2

  (மனத்தில், முகத்தில்) குழப்பமற்ற நிலை; சாந்தம்.

  ‘இடம் மாறினாலாவது மனத்துக்கு அமைதி கிட்டும்’
  ‘துறவியின் முகத்தில் பரிபூரண அமைதி நிலவியது’

 • 3

  தொல்லையின்மை; சுமுகம்.

  ‘அவருக்கு அமைதியான வாழ்க்கை அமைந்தது’

 • 4

  (நாட்டில்) போர், கலகம் இல்லாத நிலை; சமாதானம்.

  ‘நாட்டில் ஓரிரு அசம்பாவிதங்களைத் தவிரப் பொதுவாக அமைதி நிலவுகிறது’
  ‘அமைதிக் காலப் பணி வேறு, போர்க் காலப் பணி வேறு’

 • 5

  அடக்கம்.

  ‘அவரது அமைதியான குணம் அனைவரையும் கவர்ந்தது’
  ‘அமைதியான பையன்’

 • 6

  (கலையில்) இசைவு.

  ‘மரபுக் கவிதையின் யாப்பில் காணப்படும் ஓசை அமைதி’
  ‘சிறுகதையின் உருவ அமைதிக்கு இந்தக் கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு’
  ‘இலக்கண அமைதி’

 • 7

  இலக்கணம்
  விதிக்கு மாறாக இருந்தாலும் விலக்காக ஏற்கத் தகுந்தது.

  ‘வழுவமைதி’

 • 8

  தவறு, தோல்வி போன்றவற்றுக்கான விளக்கம்; சமாதானம்.

  ‘தேர்தல் தோல்விக்குக் கட்சித் தலைவர் என்ன அமைதி சொல்லப்போகிறார்?’