தமிழ் அமைதிகா யின் அர்த்தம்

அமைதிகா

வினைச்சொல்-காக்க, -காத்து

 • 1

  (பேசியோ கூச்சலிட்டோ) ஒலியெழுப்பாமல் இருத்தல்.

  ‘மருத்துவமனையில் அமைதி காக்க வேண்டும்’
  ‘நீதிமன்றத்தில் பார்வையாளர்கள் அமைதிகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்’

 • 2

  பொறுமையைக் கடைப்பிடித்தல்.

  ‘இன்று நாடு உள்ள சூழலில் பொதுமக்கள் அனைவரும் அமைதிகாக்க வேண்டும் என்று கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்’