தமிழ் அமைப்பு யின் அர்த்தம்

அமைப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றின்) பல்வேறு கூறுகள் இணைந்து நிற்பது.

  ‘அணுவின் அமைப்பு’
  ‘கட்டடத்தின் அமைப்பு’
  ‘வானொலி மற்றும் தொலைக்காட்சி அமைப்பு மேலும் விரிவுபடுத்தப்படும்’
  ‘நாட்டின் அரசியல் அமைப்பைப் புரிந்துகொண்டால்தான் தகுந்த திட்டங்களை வகுக்க முடியும்’

 • 2

  குறிப்பிட்ட நோக்கத்துக்காக உருவாகி இருக்கும் குழு அல்லது இயக்கம்.

  ‘விடுதலை இயக்க அமைப்புகள்’
  ‘ராணுவம் நாட்டைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு’

 • 3

  (உடல், உறுப்பு ஆகியவற்றின்) வடிவம்; தோற்றம்.

  ‘சிங்கத்தின் உடலமைப்பு’
  ‘முக அமைப்பு’

 • 4

  (புவியியலைக் குறிக்கும்போது) குறிப்பிட்ட நிலப் பகுதி அமைந்திருக்கும் தன்மை.

  ‘கடல்வழிகள், நில அமைப்பு, கடல் நீரோட்டம், அலைகளின் தன்மைபற்றிய படங்களும் நூல்களும் வெளியிடப்பட்டன’