தமிழ் அரக்கி யின் அர்த்தம்

அரக்கி

பெயர்ச்சொல்

 • 1

  (புராணத்தில்) ராட்சசி.

 • 2

  (அன்பு, இரக்கம் போன்ற மென்மையான உணர்வுகள் அற்ற) கொடியவள்.

  ‘அவள் ஈவிரக்கம் அற்ற அரக்கி’

தமிழ் அரக்கி யின் அர்த்தம்

அரக்கி

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒரு பக்கமாக) விலகி அல்லது விலக்கி; தள்ளி.

  ‘இவ்வளவு இடமிருக்கிறதே, சற்று அரக்கி நில்’
  ‘சண்டையின் காரணமாக நாங்கள் ஊரை விட்டு அரக்கி வந்துவிட்டோம்’
  ‘பெட்டியை அரக்கி வை’
  ‘சேறும்சுரியுமாக இருக்கிறது. மாட்டைக் கொஞ்சம் அரக்கிக் கட்டு’