தமிழ் அரக்கு யின் அர்த்தம்

அரக்கு

வினைச்சொல்அரக்க, அரக்கி

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (உள்ளங்கையில் ஒன்றை வைத்துக் கசக்கி அல்லது காலால் மிதித்து) அழுத்தித் தேய்த்தல்.

  ‘பச்சிலையைக் கையில் வைத்து அரக்கிப் பிழிந்தார்’

 • 2

  வட்டார வழக்கு (ஓசைபட) மெல்லுதல்.

  ‘வாயில் எதைப் போட்டு அரக்கிக்கொண்டிருக்கிறாய்?’

தமிழ் அரக்கு யின் அர்த்தம்

அரக்கு

பெயர்ச்சொல்

 • 1

  முத்திரையிடப் பயன்படுத்தும் கருஞ்சிவப்பு மெழுகு.

  ‘அரக்கின் மேல் அஞ்சலக முத்திரையைப் பதித்தார்’