தமிழ் அரங்கம் யின் அர்த்தம்

அரங்கம்

பெயர்ச்சொல்

 • 1

  (நாடகம், நாட்டியம் முதலியவை நடக்கும்) மேடை.

  ‘நாடகம் முடிந்ததும் நடிகர்கள் அரங்கத்திற்கு வந்து வணங்கினர்’

 • 2

  கேளிக்கை அல்லது விளையாட்டு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு உரிய கட்டடம் அல்லது திறந்தவெளியில் அமைக்கப்பட்ட இடம்.

  ‘சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்றது’
  ‘எங்கள் ஊரில் ஒரு விளையாட்டு அரங்கம்தான் இருக்கிறது’