தமிழ் அரங்கு யின் அர்த்தம்

அரங்கு

பெயர்ச்சொல்

 • 1

  காண்க: அரங்கம்

 • 2

  (பொதுமக்களுக்கான பொருட்காட்சி போன்ற ஏற்பாட்டில் ஒவ்வொரு நிறுவனமும்) காட்சிப்பொருள்கள் வைத்திருக்கும் இடம்.

  ‘கைத்தறிக் கண்காட்சியில் 150 அரங்குகள் இடம்பெறும்’

 • 3

  (ஒருவர் அல்லது ஒரு துறை) செயல்படும் களம்.

  ‘மக்களாட்சி நம் நாட்டில் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்படுவதற்காக உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கலாம்’
  ‘தகவல் தொழில்நுட்பத் துறையால் இந்தியாவுக்குச் சர்வதேச அரங்கில் புதிய மரியாதை ஏற்பட்டிருக்கிறது’
  ‘பெண்கள் அதிக அளவில் அரசியல் அரங்கில் நுழையத் துவங்கியுள்ளனர்’
  ‘புதிய நிதியமைச்சரின் வருகைக்குப் பின் வணிக அரங்கில் மாற்றம் தெரியத் தொடங்கியுள்ளது’

 • 4

  (மருத்துவமனையில் பிரத்தியேக வசதிகளைக் கொண்ட) அறுவைச் சிகிச்சை நடத்துவதற்கான அறை.

  ‘இந்த மருத்துவமனையில் இரண்டு நவீன அறுவைச் சிகிச்சை அரங்குகள் இருக்கின்றன’

 • 5

  (நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகியவற்றில்) குறிப்பிட்ட சூழலைக் காட்டும் விதத்தில் உருவாக்கப்படும் அமைப்பு.

  ‘இந்தப் படத்திற்குத் தொழிற்சாலை போன்ற அரங்கை உருவாக்கியிருக்கிறோம்’
  ‘ஒரு காட்சிக்கான அரங்கை நிர்மாணிக்கச் சில சமயம் கோடிக்கணக்கில் பணம் செலவாகும்’
  ‘இந்தத் தொலைக்காட்சித் தொடருக்கென்றே தனியாக ஒரு அரங்கை உருவாக்கியிருக்கிறோம்’

 • 6

  ராணுவ நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ள இடம்; போர்முனை.

  ‘போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று கிழக்கு அரங்கிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன’

 • 7

  கருத்துப் பரிமாற்றத்துக்கு அல்லது கருத்து பரவுவதற்கு வாய்ப்பளிக்கும் பொதுவான அமைப்பு.

  ‘தேசிய ஒருங்கிணைப்புச் சபை ஒரு பயனுள்ள அரங்காக விளங்கும்’