தமிழ் அரங்கேற்றம் யின் அர்த்தம்

அரங்கேற்றம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு புதிய கலைப் படைப்பைப் பார்வையாளர்களின் முன் முதல் முறையாக அளிக்கும் நிகழ்ச்சி.

  ‘நாளை என் மகளுக்கு பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெறுகிறது’

 • 2

  (நாடகம், நாட்டிய நிகழ்ச்சி போன்றவை) மேடையேற்றப்படுதல்.

  ‘நாங்கள் எங்கள் நாடகங்களைப் பல நாடுகளிலும் அரங்கேற்றம் செய்திருக்கிறோம்’
  ‘இந்நாடகம் மூன்று இடங்களில் அரங்கேற்றம் பெற்றது’

 • 3

  (முற்காலத்தில்) ஒருவர் தான் இயற்றிய நூலை அறிஞர்களின் அவையில் படித்துக் காட்டி அங்கீகாரம் பெறும் நிகழ்ச்சி.