அரட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அரட்டு1அரட்டு2

அரட்டு1

வினைச்சொல்

  • 1

    பிறரைப் பயமுறுத்தும் விதத்தில் சத்தமாகப் பேசுதல்.

    ‘குழந்தையை ஏன் அரட்டுகிறாய்?’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (வளவளவென்று) பேசுதல்; தேவைக்கு அதிகமாகப் பேசுதல்.

    ‘அவர் எப்போதும் நெடுக அரட்டிக் கொண்டேயிருப்பார்’
    ‘அந்தப் பொடியன் எந்த நேரமும் அரட்டிக்கொண்டேயிருப்பான்’

  • 3

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரைப் போகுமாறு) விரட்டுதல்.

    ‘சும்மா கதைத்துக்கொண்டிருக்காமல், அவளை அரட்டிவிடு’

அரட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அரட்டு1அரட்டு2

அரட்டு2

வினைச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (தூங்கிக்கொண்டிருப்பவரை) விழிக்கச்செய்தல்; எழுப்புதல்.

    ‘அவனைத் தூக்கத்திலிருந்து அரட்டிவிடு’
    ‘இரவு ஒருவரையும் அரட்டிவிடாமல் அவன் வெளியே எழுந்து போனான்’
    ‘விடிந்து இவ்வளவு நேரமாகியும் தூங்குகிறானா? அவனை அரட்டிவிடு’