தமிழ் அர்த்தம் யின் அர்த்தம்

அர்த்தம்

பெயர்ச்சொல்

 • 1

  (மொழியில்) சொல் தெரிவிப்பது அல்லது குறிப்பிடுவது; (சொல்லின்) பொருள்.

  ‘சொற்களுக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் அகராதியைப் பார்க்கிறோம்’

 • 2

  (கருத்து, செயல் போன்றவற்றின்) பொருள்.

  ‘நீங்கள் சொன்னதைச் செய்யாததால் நான் உங்களை மதிக்கவில்லை என்று அர்த்தமா?’
  ‘ஒருவரையொருவர் அர்த்தத்தோடு பார்த்துக்கொண்டார்கள்’
  ‘கடைசி நேரத்தில் ‘வரமாட்டேன்’ என்றால் என்ன அர்த்தம்?’
  ‘அர்த்தமில்லாத பேச்சு’
  ‘மாக்கோலம் போட்டிருக்கிறார்கள் என்றால் வீட்டில் விசேஷம் என்று அர்த்தம்’

 • 3

  காரணம்.

  ‘அர்த்தத்தோடு கோபப்பட்டால் பரவாயில்லை’
  ‘அர்த்தமில்லாமல் சிரிக்கக் கூடாது’